மனுநூல் விளக்க பரப்பு கருத்து இயக்கம் இன்று முதல் மூன்று நடைபெற உள்ளதை தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆவடியில் தொடங்கி வைத்தார்.
மனுஸ்மிருதி நூலில் பெண்களைப் பற்றி கூறியுள்ளதை தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதை கண்டித்து பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதேப்போன்று தொல் திருமாவளவன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுதர்ம நூலில் பெண்கள் பற்றி கூறியுள்ளதை விளக்குவதற்காக இன்று முதல் நவம்பர் 5 வரை தமிழகம் முழுவதும் கருத்து பரப்பி இயக்கம் துண்டுபிரசுரங்கள் வழங்க உள்ளனர். இதை இன்று ஆவடியில் தமிழ் சைவப் பேரவை இயக்கத் தலைவர் கலையரசி நடராஜன் அவரிடம் முதல் துண்டு பிரசுரத்தை கொடுத்து தொல் திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர் சந்தித்த தொல்.திருமாவளவன், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும. அப்படி செய்யவில்லை என்றால் அதிமுக அரசை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள். அதேபோன்று பாஜகவினர் வேல் யாத்திரை ஒரு அரசியல் நாடகம். வன்முறையை தூண்டுவதற்கு அது வழிவகுக்கும் எனவும் குற்றம் சாட்டினார்.
அதேப்போன்று மனுதர்ம நூலை பற்றி நான் பேசுவதற்கு நான் மட்டுமே பொறுப்பு எனவும் திமுக கூட்டணி கட்சிகள் இதில் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கமலஹாசன் கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என தெரிவித்ததை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதி மன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு பதிவு செய்து உள்ளார்.