இந்தியா

170 பேர் மாயமான உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று திடீரென ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 170 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 10 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மற்றவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்று மீட்புக்குழு தெரிவித்து உள்ளது.

இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் ரிஷிகங்கா எனும் புதிய நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் தாலிங்கா மற்றும் அலெக் நந்தா எனும் இரு ஆறுகள் இணையும் இடத்தில் இந்த நீர்மின் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் நாள்தோறும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இமயமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஜோஷிமடம் அருகே இருந்த நந்தாதேவி எனும் பெரிய பனிக்கட்டி உடையத் தொடங்கி இருக்கிறது.

இந்தப் பனிக்கட்டி உடையத் தொடங்கியதால் உத்தரகாண்ட் மாநிலத்தின் தாலிங்கா, அலெக் நந்தா எனும் இரு ஆறுகளில் நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு வரும்போது ரிஷிகங்கா எனும் பகுதியில் 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். வெள்ளப்பெருக்கு வருவதை உணராத தொழிலாளர்கள் அனைவரும் இந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தொழிலாளர்களைத் தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வெள்ளபெருக்கு அதிகரித்த நிலையில் தற்போது வரை அம்மாநிலத்தின் 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மேலும் தபோன் பகுதியில் உள்ள முக்கியமான 5 பாலங்களும் உடைந்து இருக்கிறது. இதனால் மீட்புப் பணியில் கடும் தாமதம் ஏற்பட்டதோடு பதட்டமான நெருக்கடியும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த வெள்ளப் பெருக்கினால் இரு ஆற்றங்கரை பகுதிகளிலும் இருந்த குடிசைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு, பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வீழ்ந்து இருக்கிறது. மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டு 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அந்த கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 தொழிலாளர்களின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டு இருக்கிறது. உத்தரகாண்டில் நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.