தமிழ்நாடு

அதிமுக தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, ஒரு குடும்பம் ஆள்வதற்கு தலை வணங்காது- முதல்வர் அதிரடி பேச்சு!

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பொதுமக்கள் இடையே பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது தொண்டர்கள் ஆளும் கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஒரு குடும்பம் ஆளுவதற்கு எப்போதும் இந்த கட்சி தலை வணங்காது என அதிரடியாகப் பேசியுள்ளார். மேலும் சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு சதி செய்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். எச்சரிக்கையோடு இருந்து ஒவ்வொரு தொண்டனும் அதிமுகவை கட்டிக் காக்க வேண்டும் என்றும் பேசினார்.

வருகின்ற தேர்தலைக் குறித்து பேசிய அவர், அதிமுக அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் உரையாற்றினார். இந்த உரைக்குப் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் குறித்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசாங்கத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

மேலும் இடஒதுக்கீடு கொடுக்க வாய்ப்பு உண்டா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, எந்த சூழ்நிலையிலும் எதைச் செய்ய வேண்டுமோ அந்த அந்த சூழ்நிலையில் அதற்கேற்றார் போல அரசாங்கம் செயல்படும். நான் சென்ற இடம் எல்லாம் சிறப்பாக எழுச்சியாக மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்.

மேலும் அமமுக கட்சி வேறு, அதிமுக வேறு. இதில் மூக்கை நுழைக்க பார்த்தால் நிச்சயம் ஒன்றும் நடக்காது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர விருப்பப்பட்டால் தலைமை முடிவு செய்யும் என்றார். மேலும் பொது எதிரியை ஒன்றாக சேர்த்துத்தான் எதிக்க முடியும் என சசிகலா கூறுவது பற்றி எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் அவர்கள், திமுக ஒரு தீய சக்தி என்று கூறினார். அவர்களை எதிரி கட்சியாக பார்க்கிறோம். அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருகிறோம்.

நீங்கள் சசிகலா குறித்து பேசுவதில்லையே என எழும்பும் கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியில் இல்லாதவர்களை குறித்து ஏன் பேச வேண்டும். டிடிவி தினகரன் எங்கள் கட்சியை சேர்ந்த 18 எம்எல்ஏக்களை பிரித்துக் கொண்டு சென்று ஆட்சியை உடைக்க வேண்டும் பிரிக்க வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால் கட்சியை உடைக்க முடியவில்லை அமமுக என்று ஒரு கட்சியை தொடங்கினார். அது பற்றி பேசுகிறோம். இவர்களின் குற்றசாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஊழல் தனி நீதிமன்றம் அமைத்துள்ளது. இது தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். 23 பேர் மீது ஊழல் புகார் வழக்கு நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் துணைமுதல்வர் பற்றி எதிர்க்கட்சி துரைமுருகன் விமர்சனம் செய்ததற்கு பதில் அளித்த அவர், துணை முதல்வரை பற்றி துரைமுருகன் கவலைபட வேண்டாம். இத்திட்டமிட்ட விமர்சனத்தில் துணி அளவு கூட உண்மையில்லை என்றும் இது கட்சியில் பிளவை ஏற்படுத்தாது என்றும் பேசினார். மேலும் அதிமுக ஆட்சியில் ஒரே வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் உதவி பெற்று தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.