இது தெரியாம போச்சே..! கொய்யா இலை அவ்வளவு நல்லதா..?
சில இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடி கட்டி வெதுவெதுப்பாக தேன் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகளைப் பெறலாம். மெக்சிகோவிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் கொய்யாவின் இலைகளை இன்றும் மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுத்துகிறார்கள் எனில் அதில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருப்பதே காரணம். அதன் பலனை அடைந்த பலரும் தற்போது வாரம் ஒருமுறையேனும் தேனீராக அருந்தி வருகின்றனர்.
சில இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடி கட்டி வெதுவெதுப்பாக தேன் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக வயிற்றுக் கோளாறுகளான செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது. அதேபோல் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை அளிப்பதிலும் கொய்யா சிறந்ததாக உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும் பலர் இதை அருந்தி வருகின்றனர். கனிசமான அளவில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் சிறந்தது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றின் போதும் ஒரு கிளாஸ் கொய்யா நீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சரும அழகைப் பராமரிப்பதிலும், தலைமுடிப் பிரச்னைகளைத் தீர்க்கவும் கொய்யா இலை மகத்தான வேலைகளை செய்கிறது.