உணவுஉணவுகள்நாகரிகம்

காபி பிரியர்களுக்கான முக்கிய தகவல்கள்

நீங்கள் ஒரு காபி பிரியராக  இருந்தால், காபி உங்கள் உடலுக்கு அளிக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.காபி நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டும் இல்லாமல் நாம்  அழகையும் மேன்படுத்த உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா . நீங்கள் கடைகளில் வாங்கும்  ஸ்க்ரப்களை விட காபி ஸ்க்ரப் பலமடங்கு நன்கு வேலை செய்யும் . நான் நகைச்சுவைக்காக இதை சொல்லவில்லை! காபி உங்கள் சருமத்தை இறுக்கி பிரகாசமாக்கி, மென்மையான தோற்றத்தை தரும்.எதனை காபி ஸ்க்ரப் பை உபயோகித்து நீங்களே உணரலாம்.

வயதாவதை  தடுக்கிறது

  புகைப்படவயதாதலை  தடுக்கும். அதாவது அதிகமான புற ஊதா கதிர்கள் மேலே படும்போது இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படும் . ஆனால் உங்கள் முகத்தில்  காபி ஸ்க்ரப் பயன்படுத்துவது அதை மாற்றியமைக்கும். ஒரு ஆய்வில் காபி தூள்  தோலில் ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தடுக்கிறது.

சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது

 காபி ஸ்க்ரபை  முகம் / உடல்  உபயோகிக்கும் போது  வெவ்வேறு உடல் பாகங்களுக்கு  ரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. மேம்பட்ட சுழற்சி என்பது உங்கள் செல்கள் அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன, இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது.

தோலை இறுக்குகிறது

காபி தோலில் இருந்து அனைத்து அழுக்கு மற்றும் இறந்த செல்களை அழித்து, புது செல்கள் உருவாக்க உதவுகிறது. ஸ்க்ரப்பிங் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை இறுக்குகிறது. புது செல்கள் இருண்ட புள்ளிகள் (dark spots )மற்றும் சீரற்ற தோல் தொனியைக்  (uneven skin tone) குறைக்க உதவுகிறது.

செல்லுலைட்டைக் குறைக்கிறது

செல்லுலைட் என்பது   தோலடியில் சேரும்  கொழுப்பு , குறிப்பாக பெண்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் அவை சேரும்.

 உங்கள் சருமத்தில் செல்லுலைட்டின் தோற்றத்தை அகற்ற காபி உதவுகிறது. வெவ்வேறு உடல் பாகங்களுக்கு மேற்பூச்சுடன் பயன்படுத்தும்போது காஃபின் (caffine) செல்லுலைட் குறைப்புக்கு உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

எனவே இனி காபி யினால் கிடைக்கும் பலன்களை பற்றி யோசிக்கும் போது இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் காபி யை உபயோகித்து செய்யப்படும் ஸ்க்ரப்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இறந்த சரும செல்களை முடக்குகிறது

மேலும் புதிய, பிரகாசமான மற்றும் மென்மையான தோலை அடியில் வெளிப்படுத்துகிறது. குளிக்கும்  போது உங்கள் உடல் மற்றும் முகம் முழுவதும் ஒரு காபி ஸ்க்ரப் பயன்படுத்துவது  உங்கள் சருமத்தை தொடுவதற்கு மென்மையாக்குகிறது. காபியின் ஊக்கமளிக்கும் நறுமணம்   உங்கள் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.