உணவுகள்நாகரிகம்

கேன்சரை தடுக்கும் மஞ்சள் || உயிர் காக்கும் மஞ்சள்

நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான பிறகு மஞ்சளுக்கான காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று வைத்துள்ளது.

எல்லோரிடமும் மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம்  ஜூலை 14-ம் நாள் சென்ற ஆண்டு முதல்   கொண்டாடப்பட்டு வருகிறது.

மஞ்சளின் சிறப்புகள் 

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.

குர்க்குமின் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோயால் மூளையில் ஏற்படும் கெடுதி தரும்படிவைக் (Plaque) குறைக்கிறது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையில் அல்சைமர் நோய் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா அமைலாய்ட் புரதங்களைப் பரிசோதனைக் குழாயில் போட்டு அத்துடன் மிகக் குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா அமைலாய்ட் புரதங்களை ஒன்று சேரவிடாமல், அவை நாறுகளாக மாறாமல் இருக்க உதவுகிறது.

 ஆராய்ச்சிகளின்  முடிவு

இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவதுதான் காரணம். இப்போது புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தருவதற்கு மட்டுமே பயன்படுவதல்ல மஞ்சள்; புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புரதத்தைத் தடுக்கக்கூடியதும் கூட என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே ஆராய்ச்சியாளர்கள்  கருதுகிறார்கள்.

மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின்(Curcumin) என்கிற மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீட்டா அமைலாய்ட் புரத சேமிப்புகளை(Beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

லுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.