உலகின் தலைசிறந்த கலாச்சாரங்களில் ஒன்றாக நமது இந்திய கலாச்சாரம் இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு காரணமும், அறிவியலும் இருக்கிறது. இப்போதிருக்கும் விஞ்ஞானி கண்டறிந்ததை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு கண்டறிந்தோடு மட்டுமில்லாமல் நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவற்றை பின்பற்றும்படி செய்துள்ளனர்.
நமது கலாச்சாரத்தின்படி திருமணமான பெண்கள் மெட்டி அணிவது வழக்கம், மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதற்கான அடையாளம் மட்டுமல்ல.
கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.
ஏன் இரண்டாவது விரலில் மெட்டி அணிவிக்கிறோம் என்றால் இரண்டாவது விரலில் இருந்து செல்லும் ஒரு நரம்பு கருப்பை வழியாக இதயத்தை இணைக்கிறது.
மெட்டி அணிவது கருப்பையை பலப்படுத்தும். இதன்மூலம் கருப்பைக்கு சீரான அளவில் இரத்தம் செல்வதோடு மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
வெள்ளி ஒரு சிறந்த ஆற்றல் கடத்தும் பொருள், எனவே காலில் மெட்டி நிலத்திலிருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றலை உடலுக்கு கடத்தும்.
இவ்வாறு நம் கலாச்சாரத்தில் உள்ள ஒரு ஒரு செயலுக்கு பின்னும் பல அறிவியல் காரணங்கள் மறைந்து உள்ளது.