போலீஸாரிடம் ஆபாசமாக சீறிய இளம்பெண்! இணையத்தில் பரவிய விறல் வீடியோ..3 பிரிவுகளில் புகார் பதிவு செய்த போலீஸ்..
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் போலீஸார் வேகமாக சென்ற காரை மடக்கி, சோதனையிட்டனர்.அப்போது திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரியும் காமினி, அவரது ஆண் நண்பருடன் கார் ஓட்டிக்கொண்டு வந்துருகின்றனர்..
அப்போது காரில் இருந்து இறங்கி வந்த அப்பெண், தடாலடியாக போலீஸாரிடம் சரமாரியாக பேசி உதைக்க முற்பட்டார். மேலும் அப்பெண், “நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா?” என்று பேசியதுடன் ஆபாச வார்த்தைகளால் போலீஸாரை தரக்குறைவாக வசைபாடி பேசினார். மேலும் தான் மீடியாவில் இருப்பதாக மிரட்டிய அப்பெண்ணை நீண்ட நேரமாக போலீஸார் சகித்துக் கொண்டனர்.
பின்னர் போலீஸாரோ, ‘போலீஸாரின் சோதனைக்கு கொஞ்சம் ஒத்துழையுங்கள் மேடம்’ என்று மரியாதையாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
காவல்துறை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் ஆபாசமான மொழியைப் பயன்படுத்தியதற்காக அந்தப் பெண் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (பி) (ஆபாச மொழி), 323 (தானாக முன்வந்து புண்படுத்தும்), மற்றும் 353 (ஒரு அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க தாக்குதல் அல்லது குற்றவியல் படை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.