இயற்கைஉலகம்

கொரோனவை தவிர உலகை உலுக்கிய 7 பேரழிவுகள்…

வெட்டுகிளிகள் படையெடுப்பு
ஆப்பிரிக்காவில் இருந்து ஆரம்பித்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது. இந்தியாவில் கடந்த ஜுன்- ஜுலை மாதங்களில் படையெடுத்த வெட்டுகிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம் போன்ற 9 மாநிலங்களில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. இதனால் ராஜஸ்தானில் அதிகப்பட்சமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகியதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இல்லாவிட்டாலும் நீலகிரி மற்றும் தர்மபுரியில் வித்தியாசமான வெட்டுகிளிகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

ஆம்பன் சூறாவளி
அடுத்து, கடந்த 1999 ஆம் ஆண்டு ஏற்ட்ட சூப்பர் சூறாவளிவளிக்குப் பிறகு வங்காள விரிகுடாவில் மிகப் பெரிய சூறாவளி ஒன்று ஏற்பட்டது. அதுதான் ஆம்பன் சூறாவளி. இதனால் மேற்கு வங்கம் பலத்த சேதங்களை சந்தித்தது. சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சூறாவளியினால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் உயிரிழப்பு 86 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கலிபோர்னியா காட்டு தீ
அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏறபட்ட பேரழிவு. கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து ஒட்டுமொத்தமாக 4 மில்லியன் ஏக்கர்களை காவு வாங்கி இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் படு மோசமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த தீ விபத்து கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டதை விடவும் பல மடங்கு பெரியது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு இருந்தனர். வெப்பநிலை மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய காட்டு தீ
இதேபோன்று இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிலும் தீவிபத்து ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பரவலான இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ அதன் சுற்றுச்சூழலை மோசமாக பாதித்ததாகக் கூறப்படுகிறது.

பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு
அடுத்து மியான்மர் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து. இந்தக் கடற்கரை நகரில் 6 வருடங்களுக்கு முன்பு பராமரிப்பின்றி வைக்கப்பட்ட 2,780 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த சிதறியதால் ஏற்பட்ட சேதம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் பெய்ரூட் கடற்கரை ஒட்டிய 2 கிலோ மீட்டர் சுற்றளவு முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அதோடு இந்தப் பாதிப்பினால் 2.50 லட்சம் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

துருக்கியில் பூகம்பம்
அடுத்து, அக்டோபர் இறுதியில் ஏஜியான் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தினால் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் பல நகரங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன. இதனால் 116 பேர் உயிரிழப்பு மற்றும் 1,035 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவாக இருந்தது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வாளர்கள் கணித்து இருந்தனர்.

ரஷ்யா ஏரியில் டீசல் கலப்பு
அடுத்து ரஷ்யாவில் உள்ள ஒரு நன்னீர் ஏரியில் கடந்த மே 29 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு விபத்து பல உலக நாடுகளை அதிர வைத்தது. துருவ ஆர்டிக் பகுதியில் உள்ள அந்த நன்னீர் ஏரியில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் எரிபொருள் கலந்ததால் ஒட்டுமொத்த ஏரியும் ரத்தக் கடாக மாறியது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய எண்ணெய் விபத்து நடைபெற வில்லை என்று பல உலகத் தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.