கோடை நோய் தவிர்க்க.. நெல்லிக்காய் ஜூஸ்..!! ட்ரை செஞ்சி பாருங்க..!!
கோடைக்கேற்ற பானங்களில் இவை முதன்மையானது. நீர் மோர், இளநீர், கற்றாழை சாறு போன்று கோடையை சமாளிக்க நெல்லி மோர் உதவும். குளுமை உடலை கொண்டிருப்பவர்களும் இதை அருந்திவரலாம்.
4 டம்ளர் அளவு நெல்லி மோருக்கு 3 நெல்லிக்காய் எடுத்து சிறிதளவு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை- கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து குடித்தால் சுவை அருமையாக இருக்கும்.உடலில் நீர்வறட்சி குறையாமல் இருக்கும். வைட்டமின் சி நிறைந்த நெல்லியும், ப்ரோபயாடிக் நிறைந்த தயிரிலிருந்து பெறும் மோரும் உடலுக்கு அளவற்ற நன்மைகளை தரும். இதயத்துக்கு நன்மை செய்யும். குறிப்பாக கோடையில் வாட்டி எடுக்கும் சிறுநீர் கடுப்புக்கு இவை சிறந்த நிவாரணமாக இருக்கும்.