காவேரி ஆற்றில் நீரின் தரம் உயர்ந்துள்ளது…
ஊரடங்கு காலத்தில் காவேரி ஆற்றில் நீரின் தரம் உயர்ந்திருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு மார்ச் 24-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும்.மருத்துவ பொருட்கள் உற்பத்தி தவிர பிற தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்தன.இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பிரம்மபுத்திரா, மகாநதி, சட்லஜ், கிருஷ்ணா, நர்மதா, பெண்ணாறு, காவேரி உள்ளிட்ட 19 முக்கிய நதிகளில் மாசு அளவு குறித்த ஆய்வுகளை மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டது.
இதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பாயும் காவேரி ஆற்றில் ஊரடங்கு காலத்திற்கு முன்பாக 42 இடங்களிலும் ஊரடங்கின்போது 33 இடங்களிலும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.இதில் ஊரடங்கின் போது 32 இடங்களில் ஆற்று நீரில் PH,DO, BOD ஆகியவற்றின் அளவுகள் இந்திய தரத்தின்படி அனுமதிக்கப்பட்ட குளிப்பதற்கு ஏற்ற தரத்தில் இருந்தது.இதன் மூலம் நீரின் தரமானது ஊரடங்கு காலத்தில் உயர்ந்திருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.