இந்த உலகமே ஓரே குடும்பம் என நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள் என சத்குரு வாழ்த்து !!
கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில், உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து உள்ளுக்குள் அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியை கொண்டாடும்படி சத்குரு கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
எல்லோருக்கும் வணக்கம். இந்த ஆண்டு தீபாவளி சற்றே வித்தியாசமான ஒரு தீபாவளியாக உள்ளது. நாம் கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறோம். வைரஸ் பாதிப்பால் நிறைய பேர் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் பல விதமான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என நீங்கள் நினைக்கலாம்.
தீபாவளியை சமூகத்துடன் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும் என்ற தேவை இல்லை. நமக்குள் அன்பாக, ஆனந்தமாக இருந்தால் அதுவே ஒரு பெரும் கொண்டாட்டம் தான். இந்த கொண்டாட்டத்தை நீங்கள் விட கூடாது. தீபாவளி நாளில் நம் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம் வர வேண்டும்.
பெருந்தொற்று சூழலில் உங்கள் நன்மைக்காக ஒரு விளக்கு ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்துக்காகவும், நண்பர்களுக்காகவும் இன்னொரு விளக்கை ஏற்றுங்கள். மூன்றாவதாக மனித குல நன்மைக்காக ஒரு விளக்கை ஏற்றுங்கள். இவ்வாறு மூன்று விளக்குகளை தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும். இது மிக மிக அவசியம். இந்த மாதிரி நேரத்தில் உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து கொண்டாடினால் தான் நமக்கு முன்னேற்றமும் தீர்வும் கிடைக்கும்.
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.