‘வைட்டமின் டி’ சத்து பெற சூரிய ஒளி மட்டும் போதுமா..?
ஆய்வுப் படி இந்தியர்களில் 70-90 சதவீதம் பேர் வைட்டமின் டி சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களில் மிக அவசியமான ஒன்று. இந்த வைட்டமின் டி சத்தைப் பெற பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. அவ்வளவு அரிதான பொருளும் இல்லை. காலை சூரிய வெளிச்சத்தில் உடல் படும்படி நின்றாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ போதுமானது. ஆனால் பலரும் இன்று பூட்டிய கேட்டுகளுக்குள் வாழ்வதால் சூரிய வெளிச்சம் என்பதையே பார்க்காதவர்களாவும் வாழ்கின்றனர்.
சூரியன் உதிர்ப்பதையும் , மறைவதையும் வைத்து மணி சொன்ன காலம் போய் சூரியன் உதிர்த்ததா, மறைந்ததா என்றே தெரியாமல் நான்கு சுவற்றுக்குள் வாழும் வாழ்க்கைதான் இன்றைய நவீன வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. இந்த வைட்டமின் டி சத்தானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எலும்புகளை உறுதியாக்குகிறது. அதேபோல் புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது, மனச்சோர்வை நீக்கும், தசை வலி, தசை பிடிப்புகளை சரிசெய்யும். அதேசமயம் உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறது பல ஆய்வுகள். எனவே உங்களுக்கு சூரிய ஒளியில் நிற்பதற்கு நேரமில்லை என்றால் உணவு மூலம் பெறலாம். அதாவது முட்டை, சால்மன் மீன், மாட்டிறைச்சி கல்லீரல், காளான், மீன் எண்ணெய் ஆகியவற்றில் கிடைக்கின்றன.
உணவும் இல்லை எனில் வைட்டமின் டி கொண்ட மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப் படி உட்கொள்ளலாம். ஒருவேளை சூரிய ஒளியில் நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிடைக்கும் சூரிய ஒளி சிறந்தது. எனவே இதற்குள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். கை, கால்கள், முதுகு, வயிறு என உடல் முழுவதும் படும்படி நில்லுங்கள். அதேசமயம் கண்களால் சூரியனை நேரடியாகப் பார்க்காதீர்கள். ஒருவேளை சூரிய ஒளியில் நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டால் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிடைக்கும் சூரிய ஒளி சிறந்தது. எனவே இதற்குள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். கை, கால்கள், முதுகு, வயிறு என உடல் முழுவதும் படும்படி நில்லுங்கள். அதேசமயம் கண்களால் சூரியனை நேரடியாகப் பார்க்காதீர்கள்.