தற்கொலைக்கு முயன்ற நடிகை “விஜய லட்சுமி” – வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்’
சீமான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. அவர், சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். சமீப மாதங்களாக சீமான் மீது பேஸ்புக் லைவ்வில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசிவந்தார். நேற்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், ‘நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார். சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து, அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், அவர் சிகிச்சைக்காக விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நடிகை விஜயலெட்சுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், அவர் சிகிச்சைக்காக விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நடிகை விஜயலெட்சுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.