தமிழ்நாடு

மாணவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு பெற இலவச பேருந்துகள் இயக்கம்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15 ஆம் தேதிமுதல் மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்கவுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பத்திரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் என அறிவித்துள்ளனர். மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் நாளை முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும். தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.