பாகிஸ்தானில் உச்சத்தை தொடுத்தும் நோய் தொற்று, கடந்த 24 மணி நேரத்தில் 6,397 பேருக்கு தொற்று..!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,25,933 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,25,933 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 2,463 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 40,247 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 47,382, சிந்து – 46,828, கைபர்-பக்துன்க்வா- 15,787, பலுசிஸ்தான்- 7,673, இஸ்லாமாபாத் – 6,699, கில்கித்-பல்திஸ்தான்- 1,030 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 28,344 பரிசோதனைகள் உள்பட இதுவரை 8,09,169 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இதுவரை ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த நிலையில் இன்று 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.