நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகர் ரிஷி கபூர் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை நடிப்பில் வெளியான, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த பின் குணமடைந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரிஷி கபூர், சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ராஜ் கபூர், இந்தியாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.நேற்று பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமானார். இப்படிப்பட்ட சூழலில் ரிஷி கபூரின் மறைவுச் செய்தி பாலிவுட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும், ரஷி கபூரின் மறைவைத் தொடர்ந்து அவரது நீண்ட நாள் நண்பரான அமிதாப் பச்சன், “அவன் சென்றுவிட்டான். ரஷி கபூர் மறைந்துவிட்டான். நான் தகர்ந்துவிட்டேன்,” என்று உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.