இயற்கை

பல நன்மைகளை கொண்ட உலர் திராட்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம்.

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

1.கர்ப்பிணி பெண்களுக்கான பயன்கள் 

  • உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.

2.இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

3.உடல் வலிமை

தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.

4.உடல் வெப்பம்

தணியும் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

5.மாதவிடாய் பிரச்சனைகள்

சில பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த, ஒரு சிறந்த மருந்தாக உலர் திராட்சை பயன்படுகிறது. 10 உலர் திராட்சை பழத்தை நீரில் ஊறவைத்து நன்றாக காய்ச்சி அருந்தினால் இந்த வயிற்று வலி பிரச்சனை சரியாகிவிடும்.

6.சீரண இதய துடிப்பு

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

7.எலும்பு பிரச்சனைகள்

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

8.மலச்சிக்கல்

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

9.கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

10.சிறுநீரக பாதையில் தொற்று

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.