அறிவியல்தகவல்கள்

‘ஒவ்வொரு உறுப்பிற்கும் அலாரம் செட் செய்யும் உடல்’ ! உயிரியல் கடிகாரம் பற்றி தெரியுமா?

நாம் இந்த நவீன உலகில் நம் எண்ணம் போல் தூங்குவதும் எழுவதும் என்று இருக்கிறோம். சிலர் காலையில் நேரத்திற்கு உண்பது உண்டு, சிலர் 10 மணி ஆனாலும் காலை உணவை சாப்பிடாமல் இருப்பர்.இவ்வாறு நேரம் தவறி பல வேலைகளை செய்கிறோம். இதற்கு ஏற்றவாறு நம் உடலில் ஜீரண கோளாறு , குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி என்று பல பிரச்சனைகள் வருகிறது. இதுற்கு எல்லாம் காரணம் நம்  உடல் கடிகாரத்தின் வேலையால் தான் .

நம் உடலில் உள்ள ஒரு ஒரு உறுப்பும் நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பாக செயல் படும் நாம் அந்த நேரத்தில் அந்த உறுப்பு சம்மந்தப்பட்ட வெள்ளையை பார்க்கும் போது நம் உடலில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

அந்த காலத்தில் நம் முன்னோர்களால் பின்பற்றி வரப்பட்ட இந்த கணிப்பு உண்மை தான் என சொல்லும் விதத்தில் பல ஆய்வுகள் இந்த உடல் உறுப்பு கடிகாரம் ( organ clock) பற்றி நடந்து கொண்டு வருகிறது.இத்தகைய அந்த ஆர்கன் கிளாக் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

3.00AM – 5.00AM  விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.

5.00AM – 7.00AM விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

7.00AM – 9.00AM காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

9.00AM-11.00AM காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

11.00AM-1.00PM முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

1.00PM – 3.00PM பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

3.00PM – 5.00PM பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

5.00PM – 7.00PM மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

7.00PM – 9.00PM இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

9.00PM – 11.00PM இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

11.00PM – 1.00AM இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

1.00AM – 3.00AM இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.