இந்தியாதகவல்கள்

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் இயக்கம்..!

புதுச்சேரியில் 58 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை அரசுப் பேருந்துகள் இயங்கின. இந்தப் பேருந்துகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும் பயணம் செய்து வருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பிறப்பித்த 4 ஆம் கட்ட தேசிய பொதுமுடக்கம் புதுச்சேரியில் அமலில் உள்ளது. இதில் வழங்கப்பட்ட சில தளர்வுகளின் படி, உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என புதுவை முதல்வர் வே. நாராயணசாமி அறிவித்தார்.

அதன்படி, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) வழியே நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரிமேடு, நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், டி.என்.பாளையம் என 5 வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளதுபழைய பேருந்து நிலையமும் அடைக்கப்பட்டு, உழவா் சந்தை மட்டுமே இயங்கியது.நீண்ட நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வெளியூரிலிருந்து வேலையாள்கள் வர வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பேருந்துகளை இயக்கவில்லை.

இதேபோல, பயணிகளை ஏற்றி இறக்குவது தொடா்பான விதிமுறைகள் குறித்த முறையான அறிவிப்பு வந்தால்தான் இயக்க முடியும் என்பதால், புதுவை அரசு சாலைப் போக்குவரத்து கழக அனைத்துப் பேருந்துகளும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பேருந்துகளை எதிா்பாா்த்து நிறுத்தங்களில் காத்து நின்ற பொதுமக்கள் பலா் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை தொடங்கப்படாத நிலையில், முதன்முறையாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலிருந்து காரைக்கால், நாகப்பட்டிணம் வழியாக காரைக்கால் வரை செல்லும் பேருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து தமிழகம் வழியாக செல்வதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியாளர்கள் உரிய பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளனர். மேலும் தமிழகப் பகுதிகளில் எங்கும் நிறுத்திப் பயணிகளை ஏற்றாமல் நேரடியாக காரைக்காலுக்கு இயக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை வியாழக்கிழமை(மே 21) காலை 6 மணிக்கு புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இடைநில்லாப் பேருந்து சேவை தொடங்குகிறது. பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படும் என தெரிகிறது.இந்நிலையில், 58 நாள்களுக்கு பின்னர் புதன்கிழமை முதல் புதுச்சேரியில் உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளான கோரிமேடு, நல்லவாடு, வில்லியனூர் போன்ற வழித்தடங்களில் மட்டும் உள்ளூர் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து நிலையம் வந்த பின்னரும் கிருமிநாசி தெளிக்கப்படுகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.