நெருக்கடியில் நேரத்திலும் அக்கறையும் நடந்து கொண்ட கேரள அரசு – மனதை நெகிழவைத்த நிகழ்வு
கொரோனாவின் அச்சம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில் நம்மிடம் மனிதநேயம் இருந்தால் போதும் கொரோனா போன்று எத்தனை வியாதி வந்தாலும் மனிதநேயத்துடன் உள்ளவர்கள் அதனை கண்டு அஞ்சமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் கேரளாவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பது கேரள மாநிலத்தில் தான். கொரோனாவைக் கட்டுபடுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவித்தது ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் அங்கன்வாடி மூலமாக பயன் பெறுபவர்களுக்கு மதிய உணவு, அனைவரது வீட்டிற்கு சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கேரளா அரசின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது.இதனை அடுத்து , ஒரு குழந்தையின் வீட்டிற்கு சென்று மதிய உணவு பிரசவித்த ஒரு அங்கன்வாடி ஆசிரியரின் முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டினர்.இக்கட்டான காலகட்டத்திலும் இவ்வாறு செயல்ப்பட்டு ,கேரளர்கள் எல்லா வழிகளிலும் நம்மை ஆச்சரியப்படுகிறார்கள். எது போன்ற செயல் சென்னை வெள்ளத்தில் பொது சிறப்பாக செயல் பட்ட நம் சென்னை வாசிகளின் செயல்களை நினைவுக்கு கொண்டுவருகிறது.