தமிழ்
திருமணமான 13 நாளில் மாயமான மனைவி: அதிர்ச்சியில் கணவர் !!
அம்மாபேட்டை: பவானி அருகே, திருமணமான, 13 நாளில் மாயமான புதுப்பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். பவானி அருகேயுள்ள குறிச்சி, அக்கரையூரை சேர்ந்த ரவிக்குமார், 27; தனியார் கம்பெனி ஊழியர். இவரின் மனைவி, சித்ரா, 23; சித்தோடு அருகே ஒரு கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வரும் நிலையில், இருவருக்கும் கடந்த, 3ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த, 12ம் தேதி, திருச்செங்கோட்டில் கோவிலுக்கு செல்வதாக, கணவரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தோழி, உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், ரவிக்குமார் நேற்று புகாரளித்தார். திருமணமான, 13 நாளில் பெண் மாயமானது, உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.