தடையை மீறி பால்குடம் எடுத்து வந்த பெண்கள்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, ஆண்டு தோறும் பெண்கள் காப்பு கட்டி ஒருவாரம் விரதமிருப்பர். ஜெயந்தி அன்று ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, பால்குடம், முளைப்பாரி நிகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி குறிப்பிட்ட அளவு பெண்கள் வழக்கம்போல் விரதமிருந்து காப்பு கட்டி பால்குடம் எடுத்து வந்தனர்.
முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தேவர் சிலைக்கு பால் ஊற்றி மரியாதை செலுத்தும் பெண். முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள். தேவர் ஜெயந்தி விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.