தங்கத்தை விட விலை அதிகம் இந்த நிறம் சாயம்
இந்த உலகில் 195 நாடுகள் உள்ளன, ஆனால் எந்தக் கொடியிலும் நீங்கள் ஊதா நிறத்தைக் பார்த்திருக்க முடியாது, ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா.. ஏனெனில் ஊதா நிறதின் விலை தங்கத்தை விட உயர்ந்தது.
ஆம்.முதல் ஊதா சாயம் மத்தியதரைக்(Mediterranean) கடலின் ஒரு சிறிய பகுதியில் வசிக்கும் ஒரு வகை கடல் நத்தைகளிலிருந்து மட்டுமே பெறப்பட்டன. ஒரே ஒரு கிராம் சாயத்தை உற்பத்தி செய்ய 10,000 நத்தைகளை தேவை பட்டது . இந்த காரணத்திற்காக, ஊதா நிறமானது ,19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தங்கத்தின் எடையை விட அதிகமாக இருந்தது.
ஊதா நிற ஆடைகள் அந்த காலத்தில் , மிக உயர்ந்த செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களால் அணிந்திருந்தன (எனவே “royal purple” என்ற சொல் உருவானது ).இதன் காரணமாகவே ஊதா நிறம் கொடிகளில் அச்சடிக்க பயன்படப்படவில்லை.
ஒருகாலத்தில் விக்டோரியா I ராணி, அவரது மக்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை நிறுவினார் அதன்ப்படி , அரச குடும்பத்தைத் தவிர வேறு யாரும் ஊதா நிறத்தை அணியத் தடை விதித்தார்கள்!
பின்னர் , 1856 யில், வில்லியம் ஹென்றி பெர்கின் என்ற பிரிட்டிஷ் பல்கலைக்கழக மாணவர் ஊதா சாயத்தை செயற்கையாக உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.
துரதிர்ஷ்டவசமாக, 1900 களுக்குப் பிறகு இந்த வண்ணம் பிரபலமாகிவிட்டாலும், அனைத்து தேசியக் கொடிகளும் ஏற்கனவே நாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன, பின்னர் அவை மாற்றப்படவில்லை.
இருப்பினும், டொமினிகா மற்றும் நிகரகுவா ஆகிய இரண்டு நாடுகளும் மட்டும் தங்கள் தேசிய கொடிகளில் ஊதா நிறத்தை கொண்டு உள்ளன,என் என்றால் அவை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்கள் கொடிகளை வடிவமைத்தது.