கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்கு செல்வது வெறும் மூட நம்பிக்கை , எதனால் எந்த நன்மையையும் இல்லை என நம்மிக்கொண்டு இருப்பார்கள் .அதுவும் இந்த அத்தலைமுறையை சேர்ந்த பலருக்கும் கடவுள் நம்பிக்கை குறைவு தான். ஆனால் நம்பிக்கையே இல்லாமல் கோவிலுக்கு சென்றாலும் உங்களுக்கு நன்மை உண்டு ஆகும்.இதன் பின் உள்ள அறிவியல் காரணத்தை கண்டு அறியலாம் வாருங்கள்
கோயில்கள் பெரும்பாலும் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்கும் இடங்களிலியே கட்டப்பட்டிருக்கும்.
கோவிலின் மூலவர் கர்பகிரஹத்தில் இருப்பார், மூலவரை வைத்தபின்தான் பெரும்பாலும் கோயிலையே கட்டத்தொடங்குவார்கள்.
இந்த கர்பகிரஹத்தில்தான் அதிக காந்த சக்தி இருக்கும். மூலவருக்கு அருகிலே செப்புத்தகட்டில் வேதமந்திரங்கள் எழுதி பதிக்கப்பட்டிருக்கும்.இதன் காரணம் என்னவென்றால் செப்புத்தகடு பூமியின் காந்த அலைகளை கிரகித்து அதனை சுற்றுப்புறம் முழுவதும் பரவச்செய்யும்.
ஒருவர் கோவிலுக்குச் சென்று கர்பகிரஹத்தை சுற்றினால் அவரின் உடல் அதிகளவு நேர்மறை ( positive ) சக்திகளை பெரும்.
கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் அதாவது கடிகாரம் சுழலும் திசையில் சுற்றி வர அப்படியே அந்த சக்தியின் சுற்றுபாதையுடன் நாமும் சேர்ந்து சுற்ற அச்சக்தி அப்படியே உடம்பில் பட்டு நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும். அதைச் சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். அது அந்த சக்தியை அப்படியே திருப்பி அனுப்பச் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான். இவைத் தவிர மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த காந்தசக்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து ஒரு கட்டத்தில் பன்மடங்காகிவிடும்.
கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடித் தொலைத் தொடர்பு உண்டு. கோயிலின் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இதுவே காரணம். கீழிருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
இதுவே நம் முன்னோர்கள் கடவுள் வழிபாட்டை கோவில்களில் கடைபிடிக்க முக்கிய காரணம் காலப்போக்கில் இந்த உண்மையாய் அறியாது தெருவிற்கு ஒரு கோவிலை கட்டிவிட்டு சிலைகளை வழிபட்டு வருகிறோம்.