டெல்லி: டெல்லியில் கடந்த ஒரு மாதத்தில் இன்று 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஊரடங்கு காலமான கடந்த ஏப்ரல் 12ம் தேதி தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள், நில நடுக்கத்தால் அச்சம் அடைந்தனர். மேலும் 2 முறை லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் குறைவாகவே பதிவானதால் சேதம் எதுவும் நேரிடவில்லை. இந்நிலையில் டெல்லியின் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு இன்று 4-வது முறையாக மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2 .2 புள்ளிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என தெரிய வந்துள்ளது.