இன்று முதல் திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்திற்கு அனுமதி…
திருப்பதியில் தற்போதைய சூழ்நிலையில் பிரம்மோற்சவ நாட்களில் அளவிற்கு அதிகமான பக்தர்கள் வருகையை தவிர்க்கும் நோக்கில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைத்திருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் துவங்கப்பட்ட 300 ரூபாய் தரிசன டிக்கெட் விற்பனை, இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் ஆகியவற்றில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கு முன் தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைத்தது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டில் இரண்டு முறை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவது, அதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளில் குளறுபடிகள் ஏற்படுவது ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசன டோக்கன் வழங்குதலை கடந்த ஒரு மாத காலமாக தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைத்திருந்தது. வருடாந்திர, நவராத்திரி ஆகிய 2 பிரமோற்சவம்களும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் நாளொன்றிற்கு 3000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நடைபெறுகிறது. டோக்கன் தேவையான பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை பதிவு செய்து இலவச தரிசன டோக்கன்களை பெற்று கொள்ளலாம்.