இந்த மழைக்காலம் நமக்கு சோதனையானா காலமாக இருக்கப்போகிறது..எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!
உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கும் கொரோன வைரஸ் இந்தியாவையும் மிக கடுமையாக பதித்து கொண்டு இருக்கிறது.கொரோன பீதி அதிகம் உள்ள பட்டியலில் இந்தியா 17 வது இடத்தில் உள்ளது.இந்த நிலையில் அடுத்து வரும் மழைக்காலம் இந்தியாவுக்கு பேராபத்தாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது உள்ளனர்.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
கொரோனா பரவல் தடுப்புக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த ஊரடங்கு நீடிக்கப்படுமா என்கிற ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் கடுமையான கோடை பருவம் நிலவிவருகிறது. கோடை காலத்தை அடுத்து மழைக்காலம் வரவிருக்கிறது. அந்த மழைக்காலத்தில் இந்தியாவில் இன்னும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அறிஞர்களின் கருத்து
வரவிருக்கும் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் கொரோனா தனது இரண்டாவது அலையை வீசும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு விலக்கு அளிக்கப்பட்ட பின்பு சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் முறையாகக் கடைப்பிடிக்கப் படுமா என்ற அச்சமும் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையின் விகிதம் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதே நிலைமை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது அலை
இந்தியாவில் தற்போதுள்ள கொரோனா நிலைமை குறித்து, இது முதல்கட்டம் மட்டுமே இரண்டாவது அலை ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கருத்தை இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனும் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக விலகல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் பாதிப்பு குறைவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மார்ச் 25 அன்று கொரோனா வழக்கு 618 ஆகவும் உயிரிழப்பு 13 ஆகவும் இருந்தபோது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. பலி எண்ணிக்கை 718 ஆக உயர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.