ஆளும் கட்சியினர் நீட் விவகாரத்தில் நாடகம் நடத்துகின்றனர்…
நீட் தேர்வு தடைசெய்யும் விவகாரத்தில் ஆளும் கட்சியினர் நாடகம் நடத்தி வருவதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் முதல்நாள் நிகழ்வு முடிந்த பின்பு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்றத்தில் முதல்நாள் நிகழ்ச்சியாக மறைந்த தலைவர்களுக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நீட் தேர்வினால் எண்ணற்ற மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்கிறது.
எனவேஅவர்களது பெயரையும் இரங்கல் தீர்மானம் சேர்த்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தாக தெரிவித்தார். ஆனால் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாதது வருத்தத்திற்கு கண்டனத்திற்கும் உரியது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், இரண்டு நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது போதாது என்று அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் அதை ஏற்கவில்லை என்றார்.நீட் பிரச்சனை குறித்தும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளதாக கூறிய அவர் இவை அனைத்தும் இரண்டு நாட்களில் பேரவையில் எடுத்து கொள்ளும் முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும், இதுவரை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை, வலியுறுத்தவில்லை என்றும், போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.மாநில அரசு மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை தராமல் கூனி குறுகிப் போய் இருக்கக்கூடிய அடிமையாக எடப்பாடி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது என்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.