30 வயது புலம்பெயர் தொழிலாளர் சண்டிகரில் கரோனாவுக்காக உருவாக்கப்பட்ட தனிமை மையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவிலிருந்து திரும்பிய இவரை சத்தீஸ்கர் போலீசார் ரய்கர் மாவட்டத்தில் உள்ள கரோனா தடுப்பு தனிமை மையத்திற்கு அனுப்பினர். அங்கு அவர் புதன் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த தொழிலாளர் தெலங்கானாவிலிருந்து தன் சொந்த கிராமமான அம்லிபலி கிராமத்துக்கு மே10ம் தேதி திரும்பிய போதுதான் அவர் தனிமை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் 14 நாட்கள் தனிமை மையத்தில் இருந்தார், அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் புதன் இரவு இவர் தனிமை மையத்தின் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதை மற்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்
முதற்கட்ட விசாரணையில் இந்த நபருக்கு மன உளைச்சல் இருந்ததாகவும் மனநலத்துக்காக இவர் கடந்த பல ஆண்டுகளாக சிகிச்சைப்பெற்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் ஏன் இந்த சோக முடிவு, அதன் பின்னணி விவரங்கள் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.