கொரோனா பரவாமல் தடுக்க ஸ்மார்ட் குப்பைத் தொட்டி, வாய்ஸ் கமன்ட் கொடுத்தால் தானாக வந்து குப்பையை கொண்டு செல்லும், “அல்லி”
கொரோனா தொற்று வேகமாக பரவாமல் தடுக்கும் வகையில், ஸ்மார்ட் குப்பைத் தொட்டியை பஞ்சாப் லவ்லி பல்கலைக்கழக( LPU ) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபில் உள்ள லவ்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட் குப்பைத் தொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளனர். 3 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உள்ள இந்த குப்பைத் தொட்டிக்கு ’அல்லி’ (Ally) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியானது, தானாக நகர்ந்து சென்று மருத்துவ கழிவுகளை சேகரித்துக் கொள்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்றானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது தடுக்கப்படும் என கூறியுள்ளனர். இந்த குப்பை தொட்டியில் அதிக குப்பைகள் சேர்ந்து விட்டால், அதனை சேர்க்க வேண்டிய இடத்தில் தானாக கொட்டிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என LPU வின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிர்வாக டீன் லோவி ராஜ் குப்தா பி.டி.ஐ.
இதன் மூடியில் பல்வேறு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. Voice Comment மூலம் இந்த குப்பைத் தொட்டி இயங்குவதால் இதனை மருத்துவமனை ஊழியர்கள் கையாள்வது மிகவும் சுலபமாக இருக்கும்.
உதாரணமாக, மருத்துவ ஊழியர்கள் சில குப்பைகளை சேகரிக்க விரும்பினால், அவர்கள், ” அல்லி, படுக்கை எண் 18 க்கு வரவும் ” என்று சொன்னால் போதும் , குப்பையை தானாக வந்து சேகரித்து செல்லும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் அறைகளில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு இந்த ஸ்மார்ட் குப்பை தொட்டி ஒரு சிறந்த கண்டுபிடிப்பு தான்.
முன்மாதிரியின் விலை ரூ. 20,000, வணிகமயமாக்கலுக்காக தொழில்துறை கூட்டாளர்களைத் தேடுகிறது LPU பல்கலைக்கழகம்.சந்தை படுத்தப்படும்போது கிட்டத்தட்ட 25 சதவிகிதம் வரை விலை குறையும் என்று எதிர்பார்க்கிறது.
தொழில்துறை கூட்டாளர்களைப் பெற்ற பின்னர், இரண்டு மாதங்களுக்குள் இறுதி தயாரிப்பு பயன்படுத்த தயாராக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.