சினிமா

“ஒரு பக்க கதை” ஓடிடி-யில் ரிலீஸ்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநரின் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு இடையே சில பிரச்னைகள் நிலவி வருகின்றன. இதனால் புதிய திரைப்படங்களின் ரிலீஸ் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே ரிலீசுக்கு தயாரான படங்களை சில தயாரிப்பாளர் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்ககதை’ நேரடியாக ஜீ5 தளத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு வெளியாவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போன இத்திரைப்படம் தற்போது ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.