இந்தியா
இ-பாஸ் முறை கர்நாடகாவில் ரத்து..!
கொரோனா பரவலின் தாக்கம் கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று போக்குவரத்து பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்தைவிட்டு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா வருவோருக்கு, மாநில எல்லைகளில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனைகள் இனி அவசியம் இல்லை என்றும், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் தேவையில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.