அழுகையைக் கட்டுப்படுத்தினால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா..?
அழுகை நல்லது என மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. ஆனால் உணர்ச்சி பூர்வமாக அணுகினால் அழுகை கெட்டது. இந்த இடத்தில் மருத்துவமா? உணர்ச்சியா? என்று வரும்போது சில உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவார்கள். அதாவது பொங்கி வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்துவார்கள். அவ்வாறு செய்வதால் உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன பார்க்கலாம். நீங்கள் அழாமல் கட்டுப்படுத்துவது உங்கள் மூளைக்கு மன அழுத்தத்தை பதிவு செய்கிறது. கார்டிசோல் ஹார்மோனை வெளியிட்டு அந்த சோகத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கண்ணீரைக் கட்டுப்படுத்துவதால் இதயத்தோடு தொடர்புடைய அனுதாபத்தை உண்டாக்கும் நரம்புகள் வேகமாக துடிக்கின்றன. எனவே இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. படபடப்பு அதிகரிக்கிறது. இதயத்தில் படபடப்பு தோன்றினாலே மூச்சு விடுவதும் அதிகரிக்கும். முழுமையாக மூச்சு விடமுடியாமல் பாதி பாதியாக மூச்சு விடுவார்கள். அழுத்தமாக உணரும்போது மூக்கு மற்றும் நுரையீரல் மூச்சிக்குழாய் இறுக்கமாக மாறுவதே இதற்குக் காரணம் என்கின்றனர். ஹார்மோன்களின் வேகமாக சுரப்பு இரத்தத்தை அதிவேகமாக அனைத்து தசைகளுக்கும் செலுத்தும். இதனால் உங்கள் கண் முன் நிகழ்வது தெரிந்தாலும் அதற்கு செயல்பட மூளை , உடல் வேலை செய்யாது. உதாரணத்திற்கு கார் முன்னே வருவது தெரிந்தாலும் விலகிச் செல்ல உடல் மூளைக்குக் கட்டளையிடாது.