விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு…
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் மற்றும் அலைகளின் சீற்றம் 3 மீட்டர் முதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதை ஏற்று கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 300 மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் சுமார் 3. 7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகள் எழ வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 14ஆம் தேதி வரை 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 300 ற்கும் மேற்பட்ட விசை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக விசை படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்தன. மேலும் அறிவிப்பு வந்த பின்னரே மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.