பால் மற்றும் வாழைப்பழத்தின் கலவையானது சிறந்த ஒன்று போல் தோன்றினாலும், இரண்டும் வேறுவேறு விதமான ஊட்டச்சத்து கொண்டு உள்ளது. (பாலில் உணவு நார் இல்லை, வாழைப்பழத்தில் உள்ளது),இதனால் ஊட்டச்சத்து பற்றாக்குறையை உண்டாக்கும்.
ஒரு ஆய்வின் படி, வாழைப்பழம் மற்றும் பாலை ஒன்றாக உட்கொள்வது நமது செரிமான அமைப்பை அதிக அளவில் தொந்தரவு செய்வதோடு மட்டுமல்லாமல் நமது சைனஸையும் சீர்குலைக்கிறது. இது சைனஸ், சளி, இருமல் மற்றும் உடலில் தடிப்புகள் போன்ற பிற ஒவ்வாமைகளுக்கு வழிவகுக்கிறது. ஆகையால், இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது நமது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் மேலும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு உண்டாக்கக்கூடும்.
ஆயுர்வேதக் கோட்பாட்டின் படி, வாழைப்பழமும் பாலும் சேர்ந்து உடலில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும், இது பல்வேறு உடல் செயல்பாடுகளைத் தொந்தரவு செய்யும்.மேலும் வாழைப்பழமும் பாலும் சேர்ந்து உடலில் கடுமையான கனமான உணர்வை ஏற்படுத்துகிறது , மேலும் நமது மூளை செயல்பாட்டை மெதுவாக்குகிறது.
சில வல்லுநர்கள் , “பாலுடன் வாழைப்பழம் உடல் பயிற்சி செய்பவர்கள் , எடை அதிகரிக்க முயல்பவர்கள் , அதிக தீவிரம் கொண்ட வேலைக்கு ஆற்றல் தேவைப்படும் மக்கள் தாராளமாக இரண்டையும் சேர்த்து உண்ணலாம். இருப்பினும், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது சளியை மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு வழிவகும் என குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு பல விதமான நேர்மாறான கருத்துக்கள் கூறப்படுவதால். இரண்டும் தனித்தனியாகக் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை , இதனை தனித்தனியாகவே சாப்பிட்டு அவற்றின் பலனை பெறலாம்.