இந்தியா
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இன்று முதல் வரும் 5-ஆம் தேதி வரை பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.