இந்தியா
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மிஷன் கர்மயோகி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!
கர்மயோகி திட்டத்தின் மூலம் மக்களுக்கு பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் மனிதவள கவுன்சில் இயங்கும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் உள்ளோர் படைப்பாற்றலுடனும், தொழில்நுட்பத்தை பற்றி அறிந்துகொள்ளவும் முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஜவுளித்துறைக்கும் ஜப்பானுக்கும் இடையே ஒன்றும், சுரங்கத்துறை-ஃபின்லாந்துடன் ஒன்றும் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறையுடன் டென்மார்க் அரசுடன் 1 என, மொத்தம் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.