நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ்களிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவுமா?
மனித உடல் பல அதிசயங்களை கொண்டது. மனிதனுக்கு சிறு காய்ச்சல் ஏற்பட்டாலும் தானாகவே அது குணமாகும் வண்ணம் மனித உடல் படைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் மனிதனின் தீய செயல்களின் விளைவாக இன்று நோய்கள் புதிது புதிதாக தோன்றுகிறது. அதற்கான மருந்து மனிதனிடமிருந்து கிடைக்குமா என்ற தேடலும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.COVID -19 தாக்குதலினால் சில நபர்கள் விரைவில் நோய்வாய்ப்பட்டுகிறார்கள், ஒரு சிலருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை, ஒரு சிலர் விரைவில் இறந்து விடுகிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வைரஸின் தாக்கம் ஏற்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களை தான் அதிகம் குறி வைக்கிறது என்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு கவனிக்கத்தக்கது.
அதிலும் ஒரு சிலருக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் நடுத்தர வயதினரை விட மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளை இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் மிகவும் குறைந்த அளவில் இருப்பதே என்று ஆராய்ச்சி கூறுகிறது. நோயெதிர்ப்பு சக்தி பற்றிய ஆராய்ச்சிகளில் இந்த செய்தி சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலவிதங்களில் உயர்த்த நம்மிடம் போதிய திறன் இருந்தும் நாம் அதை செய்வதில்லை என்று நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் பெட்ஸி ஹெரால்ட் கூறுகிறார்.
பொதுவாக மனிதனை வைரஸ்கள் தாக்கும் பொழுது அதற்கு எதிர்வினையாக மனிதன் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு நோய்எதிர்ப்பு சக்தி இருந்தால் வைரஸால் பெருமளவில் பாதிக்கப்படுவது குறையும். தொற்றுநோய் பரப்பும் வைரஸ்கள் மிகவும் ஆபத்தானவை என்று சான் டியாகோவில் உள்ள லா ஜொல்லா இன்ஸ்டிடியூட் ஃபார் இம்யூனாலஜி ஆராய்ச்சியாளர் அலெஸாண்ட்ரோ செட் கூறுகிறார். இதுகுறித்து அவர் அளித்த விளக்கத்தை காண்போம். நோயெதிர்ப்பு மண்டலத்தில் இரண்டு முக்கிய ஆயுதங்கள் உள்ளன. அதில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலின் முதல் நிலையாகும். நம் உடல் ஒரு வெளி உலக ஊடுருவலை கண்டறிந்தவுடன், இன்டர்ஃபெரான் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் பரவலான தாக்குதலை தொடங்குகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தில் மெதுவாக செயல்படும் ஷார்ப்ஷூட்டர்கள், உள்ளார்ந்த நோயெதிர்ப்பு செல்களை எச்சரிக்கின்றன. பி செல்கள் வைரஸக்கான, ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகின்றன, தடுப்பூசி கண்டறிதலில் புரதங்கள் அதி முக்கியத்துவமானது.
COVID-19 என்னும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு புதியது. ஆனால் செட்டேவின் குழு, தொற்றுநோய்க்கு முன்பு உறைவிப்பான் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்த மாதிரிகளை ஆய்வு செய்தது மற்றும் ஆய்வக சோதனைகளில் புதிய வைரஸின் ஒரு சிறிய பகுதியை தவறவிட்டிருக்கலாம். இது ஒரு அனுபவமிக்க டி செல்லாக இருக்கலாம். இது இதற்கு முன்னர் கொரோனா போன்றதொரு தொற்றை கண்டது, என்று செட்டே கூறினார். ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் இதே போன்ற கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர். புதிய கொரோனா வைரஸில் அதன் குடும்பத்தை சார்ந்த பிற வைரசுகளும் உள்ளன, அவை 30% பொதுவான ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன, எனவே ஆராய்ச்சியாளர்கள் அந்த டி செல்கள் கடந்த கால ஜலதோஷத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.