நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் – பீகார் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு
பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா காணொளி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது பீகார் தேர்தலை ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை இணைந்து சந்திக்கும் என்று தெரிவித்த அவர், ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றியை ஈட்டுவோம் என்று குறிப்பிட்டார்.
மேலும் தங்கள் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையிலேயே தேர்தலைச் சந்திக்கும் என்றும் நட்டா உறுதிபட தெரிவித்தார். கொரோனா தொற்று காலத்திலும் வெள்ளப் பெருக்கின்போதும் பீகாரில் ஆளும் நிதிஷ்குமார் அரசு திறம்பட செயல்பட்டதாக நட்டா கூறினார். அவரது உரையில் பீகார் மாநில எதிர்க் கட்சியை காலாவதியாகிவிட்டதாக சாடினார். எதிர்வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பீகார் மாநிலம் சூடுபிடித்துள்ளது.