ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆயுர்வேத ரக்சா கிட் திட்டத்தை சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் துவக்கி வைத்தார்.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதற்காக முதல்வர் சந்திரசேகர ராவ் மாநிலத்தில் பாதுகாப்புகளை உறுதி செய்ய ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கினார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் சில சட்டங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு பணிக்காக போராடும் போலீசார் ஆகியோருக்கு உதவும் வகையில் ஆயுர்வேதா ரக்சா கிட் என்ற திட்டத்தை சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் துவக்கி வைத்தார்.தெலுங்கானாவின் சிவப்பு மண்டலங்களில் , கொரோனா குறித்து பாதுகாப்பு பணிகளில், அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள உயர் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசாரிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த மாநில ஆயுஷ் பிரிவு இன்று இத்திட்டத்தை துவக்கியது.இது தொடர்பாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறுகையில், ஆயுர்வேத கிட்டில் ஐந்து வெவ்வேறு ஆயுர்வேத அடிப்படையிலான மருந்துகள் உள்ளன, அவை உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். இது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பயன்படுத்துபவர்களுக்கு இன்றியமையாதது. முதல் கட்டத்தில், ஆயுஷ் அதிகாரிகள் தெலுங்கானாவில் உள்ள போலீஸ் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே இதுபோன்ற 20,000 க்கும் மேற்பட்ட கிட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். “ஆயுர்வேத மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சிறந்தவை.இதுபோன்ற கருவிகளை சிவப்பு மண்டலங்களில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு விநியோகிப்பதற்கான முடிவு ஒரு புதிய முயற்சி “. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா கொரோனா வைரஸ் நெருக்கடியை திறம்பட கையாள முடிந்தது. இதுகொரோனா பரவலின் வீரியம் குறைவாக இருப்பது பிரதிபலிக்கிறது. இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close