டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு
மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாக்களை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழா நடந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் குவிந்தது என்பதும் இதில் வந்த லட்சக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய ஜெய் கிஷான் கொடியை செங்கோட்டையில் ஏற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய தேசியக் கொடியை பிரதமர் ஏற்றி வைக்கும் இந்த செங்கோட்டையில் இன்று விவசாயிகள் தங்களுடைய கொடியை ஏற்றி இருப்பது ஏற்றிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய போராட்டத்தின் அடுத்தகட்ட பகுதியாக இதை தாங்கள் கருதுவதாகவும் மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள் கூறி வருகின்றனர்