கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையின் நிலை என்ன…?
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு எதிரான 3 இந்திய தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பர்கவா தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் தடுப்புசியை 2வது மற்றும் 3வது கட்டமாக மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒருவாரத்திற்குள் 17 இடங்களில் இந்த பரிசோதனை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 2 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையை விட இருமடங்காக குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.