கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இருந்தாலும் இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஊரடங்கு, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், போக்குவரத்தை துண்டித்தல் என பல்வேறு வழிகளில் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.
இந்த நிலையில் ஒரு சூப்பரான தகவல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 3,731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதேபோல இந்த மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்த அளவில் உள்ளது.
குறிப்பாக சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் இறப்புகளே இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபடும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.