ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இந்தியாவின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டுள்ளது வினோதமான ஒன்றாக கருதப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த கிராமத்து மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்து வருகிறது. அது தான் இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த கிராமத்து இளைஞர்கள் முதல் திருமணம் செய்யும் பெண்ணுக்கு குழந்தை பிறப்பது இல்லை என்பதும் அதனால் தான் அனைத்து ஆண்களும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரியவருகிறது. முதல் மனைவிக்கு குழந்தை ஏன் பிறப்பதில்லை என்பது பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மர்மமாக இருந்து வருகிறது என்பதும் இதனால்தால் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து வருகின்றனர் என்பதும் ஒரு வினோதமான செய்தியாகும். மேலும் இரண்டாவது திருமணம், முதல் மனைவியின் சம்மதத்துடன் செய்யப்படுகிறது என்பதும் இரண்டாவது மனைவியும் முதல் மனைவியும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதும் இந்த கிராமத்தில் உள்ள இன்னொரு அதிசயம் ஆகும்.