மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – வின் உடல் நிலை மோசமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அமித்ஷா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ,சில நாட்களுக்கு முன்பு , வலைத்தளங்களில் எனது உடல்நிலை குறித்து சில பொய்யான தகவல்கள் வெளியாகின. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இரவு பகலாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இது பற்றி நான் கவனிக்கவில்லை.இன்று தான் இது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்வதால் சிலருக்கு ஆனந்தம் கிடைக்கும் என்றால் , அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் , எனது உடல்நிலை குறித்து தவறான தகவலை அறிந்து கவலையில் ஆழ்ந்த எனது கட்சியினர் மற்றும் நலம் விரும்பிகளுக்காக இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எனக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close