உங்கள் தாயிடமிருந்து மரபுவழியாக நீங்கள் பெறக்கூடிய ஆறு உடல்நலக் கோளாறுகள். நமது உடல்நலம் மற்றும் நலவாழ்வில் மரபியல் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. லண்டன் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட ஆய்வின்படி ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய் அவருடைய தாயாருக்கு முதல்முறை மாதவிடாய் தொடங்கிய அதே காலகட்டத்தில் மூன்று மாதங்களுக்குள் மாதவிடாய் தொடங்குவதற்கான 57 சதவிகித சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே, ஆம், மரபணுக்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.
உங்கள் தாயாருக்கு மாரடைப்பு வந்திருந்தால், உங்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் 20 சதவிகிதம் அதிகரிக்கிறது. தாய் மட்டுமல்ல, தந்தைக்கும் இது பொருந்தும். உங்கள் தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது ஏன் நடக்கிறதென்றால், மரபு வழியாக வரும் இரத்தநாள நோய்கள் இதயத்தில் இதய இரத்த தமனியையும் அத்துடன் மூளையில் பெருமூளை தமனியையும் பாதிக்கிறது.40 வயதுக்கு மேல் பெண்கள் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். உங்கள் உறவினர்களில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால், நீங்கள் மரபணு பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அஅவசியமாகும். மார்பகப் புற்றுநோய் கொண்ட குடும்ப வரலாற்றை கொண்ட பெண்கள் கேன்சர் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்க முன்கூட்டி நோயைத் தடுக்க மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். மனநோய்கள் குடும்பங்களில் மரபுவழியாக பயணிப்பதாக அறியப்படுகிறது. உங்கள் குடும்பத்தில் மன அழுத்தம் இருந்ததற்கான வரலாறு இருந்தால் உங்களுக்கும் மரபுவழியாக அது வருவதற்கு 10 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது. முறையான தூக்கத்தை கடைபிடித்து, மதுப்பழக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்து மன உளைச்சல் ஏற்படாமல் நிர்வகித்தால் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளை உங்களால் குறைக்க முடியும்.
உங்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கலாம், ஆனால் உங்கள் அம்மாவுக்கு ஒற்றை தலைவலியால் பாதிப்பு இருந்தால் நீங்களும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 70 முதல் 80 சதவிகிதம் வரை இருக்கிறது. தலைவலியை ஏற்படுத்தும். குறைபாடுள்ள மரபணு வம்சாவளியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு காரணமான சில பொதுவான தூண்டுதல்களில் சாக்லேட், சீஸ், காஃபி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் சிகப்பு ஒயின் போன்ற உணவுகளும் அடங்கும்.உங்கள் தாயாருக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் மிக விரைவிலேயே ஏற்பட்டிருந்தால் அவருடைய கால்தடங்களை பின்பற்றி உங்களுக்கும் மாதவிடாய் விரைவில் நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் 70 முதல் 85 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. மெனோபாஸ் ஏற்படும் சராசரி வயது 51. ஆனால் ஒவ்வொரு 20 பெண்களில் ஒரு பெண்ணுக்கு 46 வயதுக்கும் முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படுவதாக தெரிகிறது. விரைவில் மெனோபாஸ் ஏற்படுவதை தடுக்க உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. இருந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.