இனி தினமும் வாழையிலையில் தான் சாப்பிடுவீங்க..வாழை இலை பற்றி நாம் அறிந்திடாத சில நன்மைகள் !!
‘வாழையடி வாழையாய் வாழ்வுதனை வாழ்ந்திருப்போம்’ என்று நீடூழி வாழ்வதற்கு உதாராணமாய் வாழை மரத்தை சொல்வார்கள்.
இந்த மரத்தின் பகுதிகள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் பயனுள்ளதாக உள்ளன. இம்மரத்தின் மையத்தில் உள்ள தண்டை சாப்பிடலாம். வாழைப்பூவையும் வேக வைத்து சாப்பிடலாம். இலை மற்றும் தண்டினை இந்தியாவின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகிறார்கள். வாழை நாரிலிருந்து கயிறுகள், விரிப்புகள், கடினமான ஃபான்ட் பேப்பர்கள் மற்றும் காகிதக் கூழ் அகியவை தயாரிக்கப்படுகின்றன.
சரி, இப்போது வாழை இலையும், அதன் மகத்துவத்தைப் பற்றியும் பார்ப்போம்.
ஊட்டச்சத்துக்களை பெற உதவும்
வாழை இலையில் பரிமாறப்படும் உணவு ஆரோக்கியமான உணவாகும். சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது, இலையின் முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் உணவு இழுத்துக் கொண்டு விடும். அதேபோல, வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம்.
முடி பிரச்சனைகள் நீங்கும்
வாழை இலையில் உணவருந்துவதால், இளைஞர்களுக்கு உள்ள இளநரையை போக்க முடியும். வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி வந்தால், இளநரை மறைந்து, கருப்பு முடிகள் வளரத் துவங்கும்.
வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கிடைக்கும்
எபிகால்லோகேடெசின் கேல்லெட் என்றழைக்கப்படும் பாலிபினைல்கள் பெருமளவில் கொண்டுள்ளதாக வாழை இலை உள்ளது. இந்த சத்து கிரீன் டீயிலும் உள்ளது. பாலிஃபீனைல் என்பது செடியாக வளரும் உணவுகளில் உள்ள இயற்கையான ஆக்சிஜன் எதிர்பொருளாகும்.
தீக்காயத்திற்கு சிறந்த மருந்து
தீக்காயங்கள் ஏற்பட்டால், வாழை இலை முழுவதும் இஞ்சி எண்ணெயை நன்றாகத் தடவி விட்டு, கீழிருந்து மேல் பகுதி வரை அதை சுற்றிக் கொள்ளவும். இதன் மூலம் வெப்பத்தையும், தீக்காயங்களையும் குறைத்திட முடியும்.
கண் பிரச்சனைகள் நீங்கும்
வாழைப்பழத்தை அப்படியே அல்லது சமைத்தோ சாப்பிடலாம். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவது தவிர்க்கப்படும் மற்றும் இரத்தமும் சுத்திகரிக்கப்படும்.
குழந்தைக்கு வைட்டமின் டி கிடைக்க உதவும்
புதிதாக பிறந்த குழந்தையை அதிகாலை வேளையில் சூரிய உதயம் ஏற்படும் போது, வாழை இலையில் இஞ்சி எண்ணெயை தடவி விட்டு சுற்றி, திறந்த வெளியில் வைத்து சூரிய ஒளியில் காட்டினால், அப்போது குழந்தையின் மேல் படும் சூரிய கதிர்கள் குழந்தையின் தோல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் மற்றும் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கவும் செய்யும்.
சரும பிரச்சனைகளைப் போக்கும்
தோல் தொடர்பான எரிச்சல்கள், அரிப்புகளுக்கு வாழை இலையில் தேங்காய் எண்ணெயை தடவி பரவ விடவும். எரிச்சல் உள்ள இடத்தை அந்த வாழை இலையால் சுற்றி விட்டால், தோல் பிரச்சனை போன இடம் தெரியாது.
உணவுகள் கெட்டுப் போகாது
வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்துக் கொண்டால், அவை கெட்டுப் போவதில்லை.
நாம் உபயோகித்த பின்னும் வாழை இலை ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. இல்லையென்றால் மக்கி, இயற்கை உரமாக மாறிவிடுகிறது. இது சூற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்று.
இத்தகைய வாழை இலையில் தினமும் ஒரு வேலையாவது சாப்பிட முயல்வோம்.ஆரோக்கியத்தை பெறுவோம்..