ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மது பானங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யும் ஸ்விக்கி..!!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசிடம் ஒப்புதல் பெற்ற ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை வீட்டு வாசலிலேயே கொடுக்கும் சேவையை தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த மதுபானக் கடைகளை மாநில அரசுகள் திறந்து கொள்ளலாம் என்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து மதுக்கடைகள் பெரும்பாலான மாநிலங்களில் திறந்தவுடன் கடைகளில் கூட்டம் பெருக்கெடுத்தது.இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஜார்க்கண்ட் அரசு மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய ஸ்விக்கி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து ராஞ்சியில் மதுபான டோர்டெலிவரியை ஸ்விக்கி தொடங்கியது.மதுபாட்டில்களை ஸ்விக்கி நிறுவனம் எப்படி டோர் டெலிவரி செய்கிறது ?
*இந்த சேவையை பெற ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
*ஆன்லைன் வழியிலான மதுபான விற்பனைக்கு ஸ்விக்கி அறிவித்துள்ள வெரிஃபிகேஷன் பிராசஸ்ஸை செய்ய வேண்டும்.
*உங்கள் வயதை சரிபார்க்க ஒரு அரசு அடையாள சான்றிதழுடன் செல்பி எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும்.
* நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும். அது சரிபார்க்கப்படும்.
*ஆர்டரை பெற்றுக் கொண்டு டெலிவரி செய்வோரிடம் ஓடிபியை காண்பித்து சரக்கை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுப்படுத்தும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.