ஆடம்பரம் இல்லாமல் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துள்ளார் – பெண் இயக்குனர் “சுமணா ” !!
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது. கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கன்னடத் திரையுலகின் பெண் இயக்குனர் சுமணா தனது நீண்டநாள் காதலரைக் கரம் பிடித்து திருமணம் செய்துள்ளார்.
மிக எளிமையாக நெருங்கிய சொந்தங்களுடன் பாண்டிச்சேரியில் திருமணம் நடந்தது. கன்னட சினிமாவில் இவரின் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலர் மற்றும் புகைப்படக் கலைஞரான ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா காரணமாக யாரையும் அழைக்காமல் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து இத்திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சுமனா சில படங்களிலேயே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.